மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது இளம் விமானி ஞானேந்திரன் லெக்சன் அவர்கள்
மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது இளம் விமானியாக மன்னார் நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த ஞானேந்திரன் லெக்சன் அவர்கள் தனது முதல் கட்ட பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழை பெற்றுள்ளார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தில் கற்றதோடு
உயர்தரத்தில் தொழில்நுட்பக் கல்வியை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தில் கற்றுள்ளார்.
கடந்த வருடம் கொழும்பு ரத்மலான விமான பயிற்சி சேவையில் இணைந்து முதல் கட்ட பயிற்சியை நிறைவு செய்து சான்றுதலை பெற்றுள்ளார்.
அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது இளம் விமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.