ருத்ரன்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ருத்ரன். இப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார் 5 ஸ்டார் கதிரேசன்.
இப்படத்தில் முதல் முறையாக ராகவா லாரன்ஸுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார்.
மேலும் சரத்குமார் வில்லனாக நடிக்க, பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் நாசர், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல்
முதல் நாளில் இருந்து கலவையான விமர்சனத்தை இப்பம் பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிசில் முதல் நாள் வசூல் நல்ல வரவேற்பு இருந்து. பின் அடுத்தடுத்த நாட்களில் குறைய துவங்கிவிட்டது.
இந்நிலையில், 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 18 கோடி வரை ருத்ரன் திரைப்படம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.