போதைவஸ்து பாவனை- மன்னாரில் ஒருவர் சாவு!
போதைவஸ்து பாவனை- மன்னாரில் ஒருவர் சாவு!

(மாதவன்)
வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் - பேசாலை பகுதியைச் சேர்ந்த (23) வயதுடைய சந்திரகுமார் விஜயகுமார் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இதன்போது அவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் தலைமன்னார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி (02)இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அதிக போதைவஸ்து பாவனையே மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.(ப)

#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking

304 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.