ஆதவன்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தேராவில், இளங்கோபுரம். வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், பாரதிபுரம் ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் மருத்துவ சேவை தொடர்பாகப் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர்.
இந்தக் கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் தமக்குரிய மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, தருமபுரம், கிளிநொச்சி போன்ற நீண்ட தூரங்களிலுள்ள மருத்துவமனை களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
அதனால் இந்தக் கிராமங்களில், நடமாடும் மருத்துவ சேவையை நடத்துவதற்கு முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (எ )
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.