பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாமுகோயா காலமானார். அவருக்கு வயது 76. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த அவர் இன்று மதியம் 1.05 மணியளவில் அவர் காலமானார். வண்டூரில் நடந்த கால்பந்து போட்டியின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்
மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று பிற்பகல் 3 மணி முதல் கோழிக்கோடு டவுன் ஹாலில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை கண்ணாம்பரம் காபர்ஸ்தானில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.