(புதியவன்)
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கவுள்ள மதுபானசாலை ஒன்றுக்காக 26 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் பகுதியில் புதிதாக ஓர் மதுபானசாலை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்த அனுமதியை கோரியே இவ்வாறு 26 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிக்காக நிதி அமைச்சுக்கு விண்ணப்பிக்கும் நிலையில் இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நிதி அமைச்சுக்கே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மேலும் சில மதுபானசாலைகளுக்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (ஏ)
sv5104
wqe4hh
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.