(புதியவன்)
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்றும் மதுபானசாலைகள் மூடப்படும்.
சிறப்பாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களைத் தவிர அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் சில்லறை விற்பனைக்காக மூடப்பட வேண்டும் என கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மற்றும் சிறப்பு பூட்டிக் வில்லா உரிமம் பெற்ற இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று நட்சத்திர வகுப்புகளுக்கு மேல் உள்ள ஹோட்டல்களில் வசிக்கும் பயணிகளுக்கு இது பொருந்தாது.
மேலும், ஏப்ரல் 23, பக்புர பசலோஸ்ஸாவக போயா தினத்தன்று, நாடளாவிய ரீதியில் சில்லறை விற்பனையாளர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கான அனைத்து கலால் உரிமம் பெற்ற இடங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் இது தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் 1913 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கலால் பணிமனையின் செயற்பாட்டு அறைக்கு அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள கலால் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளுக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.