நவீன் திஸாநாயக்க பகிரங்க அறிவிப்பு!
(புதியவன்)
அனைத்து அரச தலைவர் வேட்பாளர்களும் பகிரங்க விவாதங்களில் ஈடுபட்டாலும் இல்லாவிட்டாலும் தங்களின் வெளிப்படையான தகுதிகளை மக்களுக்கு காட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
"அனைத்து அரச தலைவர் வேட்பாளர்களும், அது உயர்தர பெறுபேறு, பட்டம் அல்லது முதுநிலை/தொழில்முறை தகைமைகளாக இருந்தாலும், தங்கள் தகுதிகளை மக்களுக்கு கட்டாயம் காட்ட வேண்டும். ஒரு அற்புதமான பலமான மீட்சிக்குப் பிறகு இந்த நாட்டைச் சிதைக்கும் வெறும் பேச்சாளர்கள் இருக்க முடியாது," என்று திஸாநாயக்க தனது சமீபத்திய எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.