புதினம் தெரியுமோ!!!!!!!!!!!!!!!
புதினம் தெரியுமோ!!!!!!!!!!!!!!!

கெடுகுடி சொற்கேளாதெண்டுவினம். உந்த டிப்பர்க்காரரும் என்னதான் சொன்னாலும் ஒண்டையும் காதில போடவே மாட்டினம். டிப்பர் மாதிரி கனரக வாகனங்கள் எல்லாம் 40 கிலோமீற்றர் வேகத்துக்கு மேல இடவே கூடாது. அதுதான் சட்டம். ஆனால் இஞ்சகுச்சொழுங் கையளுக்ககூட, 80 கிலோமீற்றர் வேகத்துக்குக் குறையாமல் தான் டிப்பர் எல்லாம் பறக்குது. எவ்வளவு வேளைக்கு லோட்டை கொண்டு போய்ப் பறிக்கமுடியுமோ அவ்வளவுக்கு ஆதாயம் அவைக்கு. அப்பதானே இன்னும் நாலைஞ்சு லோட்டை ஏத்தலாம். மணலுக்கு ஒரு ரூட் பெர்மிட் எடுத்தால் அதைவைச்சே நாலைஞ்சு லோட் மணலை ஒருநாளுக்குள்ள ஓடித் தள்ளிடுவினம். அதால உந்தளவு வேகம்.

டிப்பர்களின் வேகத்தைவிட இன்னொரு விசயமும் இருக்கு. எல்லா றோட்டிலையும் டிப்பர்கள் ஓட ஏலாது. ஆனால் எங்கும் செல்வோம் எதையும் இடிப்போம் எண்ட கணக்கில டிப்பர்கள் இல்லாத றோட்டையே இப்ப பாக்க ஏலாது. யாழ்ப்பாணத்தில இருந்து பூநகரி போற றோட்டும், பூநகரியில இருந்து பரந்தன் போற றோட்டும் கன இடங்களில பள்ளம் திட்டியா மாறினதுக்கு காரணமே டிப்பர்கள்தான். எந்தப் பக்கத்தால டிப்பர்கள் மணலை ஏத்திக்கொண்டு வருகுதோ அந்தப் பக்கமாத்தான் காப்பெற் றோட், கிழிஞ்சு போய் பல்லை இளிச்சுக் கொண்டு நிக்குது. அதைமாதிரி வடமராட்சி கிழக்கிலையும் காப்பெற்றோட் போட்டு நாலைஞ்சு மாதத் நிலேயே அது நாசமாப் போனதுக்கும் டிப்பர்கள் தான் காரணம். அந்த றோட்டுகளைத் தரமில்லாமல் போட்டதும் காரணமா இருந்தாலும்கூட, டிப்பர்கள் இப்பிடி அறம்புறமா அந்த றோட்டுகளில ஓடித் திரியாட்டி இன்னும் கொஞ்சக்காலத்துக்குப் பிறகுதான் அதுகள் அலங்கோலமாகியிருக்கும்.

இப்பிடி எல்லா இடத்தையும் நாசமாக் சிறதும், போற வாறவையை அடிச்சு இயமனுக்கு பரிசாக் குடுக்கிறதையுமே தொழிலா வைச்சிருக்கிற உந்தடிப்பர்கள், இப்ப பள்ளிக்கூடப் பிள்ளையள் போற நேரத்தில, பள்ளிக்கூடங்கள் இருக்கிற றோட்டுகளிலையும் கண்டபடி இடத்தொடங்கி இருக்கினம். இத்தனைக்கும் அந்தப் பள்ளிக்கூடங்கள் தொடங்கமுதல் போக்குவரத்தை ஒழுங்குபண்ண பொலிஸ் காரரும் நிக்கிறவை. அவையைக்கூட மதிக்காமல் இந்த டிப்பர்கள் தங்கட இஷ்டப்படி ஒயிலோடு உறவாடி பிள்ளையளின்ர உயிரோட விளையாடுற வேலையைத் தொடங்கியிருக்கினம். சும்மா போய்வாற சனத்தையே பந்தாடுற டிப்பர்களுக்கு பள்ளிக்கூடப் பிள்ளையள் கிடைச்சா-? நினைக்கவே பயமாக் கிடக்கு. பொலிஸ்காரர் பள்ளிக்கூட நேரத் நிலையாவது உந்த டிப்பர்களுக்கு ஒரு கால்கட்டு போடமாட்டினமோ

#eelamnews #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்

324 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.