12.5 கோடி ரூபாய் மதிப்புடைய பல நூற்றாண்டு காலம் பழமையான புத்தர் சிலை ஒன்று காணாமற்போயுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆர்ட் கலரியில் இருந்து திருடப்பட்ட குறித்த புத்தர் சிலையானது ஜப்பானிற்கு உரியது. இந்த புத்தர் சிலை வெண்கலத்தால் ஆக்கப்பட்ட அரியவகை சிலை ஆகும்.
ஏறத்தாழ 114 கிலோ எடை சிலையானது கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி திருடப்பட்டுள்ளது.
குறித்த சிலையானது ஒரு தனி நபரால் கடத்தப்படும் காணொளி அங்குள்ள கமெராவில் பதிவாகியுள்ளது.
இது போன்ற ஒரு அழகிய புத்தர் சிலையை ஒத்த சிலை உலகில் வேறெங்கும் இல்லை. இதன் தனித்துவமான பண்புகளின் காரணமாக இதனை திருடியவர்களிடம் இருந்து எளிதில் மீட்க முடியும் என்றும் ஆர்ட் கலரி உரிமையாளர்கள் நம்பிக்கை கூறுகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.