ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் வான் படை கமாண்டர் அசம் அபு ரகபா இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அசம் அபு ரகபா ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை கமாண்டராக செயல்பட்டு வந்தார். அந்த அமைப்பின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள், பாராகிளைடர்கள், வான்வழி கண்காணிப்பு ஆகிய பிரிவுகள் அசம் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தன. கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நகரங்கள் மீது பாராகிளைடர்கள், ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அசம் அபு ரகபா மூளையாக செயல்பட்டார்.
காசா பகுதியில் இஸ்ரேல் உளவு அமைப்பான ஷின் பெட்டை சேர்ந்த உளவாளிகள், அவரை மிக தீவிரமாக தேடி வந்தனர். வடக்கு காசாவின் ரகசிய சுரங்கப் பாதையில் அசம் பதுங்கியிருப்பது நீண்ட தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அந்த இடத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை கமாண்டர் அசம் அபு ரகபா உட்பட ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் ஹமாஸின் 150 சுரங்கப் பாதைகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தின. இதில் காசா பகுதியின் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் முழுமையாக தகர்க்கப்பட்டன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.