இன்றைய ராசிபலன் (04 மார்ச் 2024)
இன்றைய ராசிபலன் (04 மார்ச் 2024)

மேடம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.

இடபம்: செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். தந்தையுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.

மிதுனம்: மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம்.

கடகம்: நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர்ப் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

சிம்மம்: உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். வியாபாரத்தில் சகவியாபாரிகளின் போட்டிகளை முறியடித்து விற்பனையைப் பெருக்குவீர்கள்.

கன்னி: தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்காகச் செலவு செய்யநேரிடும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும்.

துலாம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. பிணக்குகள் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்: எதிர்பாராத பணவரவுடன், திடீர்ச் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

தனுசு: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். ஆதாயம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படும்.

மகரம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். கடன்கள் விடயத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர்ச் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிந்தித்துச் செயற்படவும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மீனம்: எடுத்த காரியங்களில் வெற்றி உண்டா கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத் தில் இலாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

274 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.