புதியவன்.
முல்லைத்தீவு மாவட்ட மட்ட யூடோ போட்டி நேற்று திங்கட்கிழமை (22) மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முல்லை மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலர் எஸ். குணபாலன் கலந்து சிறப்பித்து போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் மாவட்டத்தின் ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ந.முகுந்தன், மாவட்ட பயிற்றுவிப்பாளர் இ.சகிதரசீலன், மல்யுத்த பயிற்றுவிப்பாளர் ஜெயதர்சன், கராத்தே பயிற்றுவிப்பாளர் தேசிந்தன் மற்றும் விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.