(புதியவன்)
பொக்ஸ் கில் இல் இடம்பெற்ற பயங்கர விபத்தின் பின்னர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பொக்ஸ் கில் ஜேர்னி எனும் டி.ஜே இரவு தொடர்பில் இலங்கை இராணுவத் தலைமையகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்த டி.ஜே இரவுடன் இராணுவம் எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றினால் பொக்ஸ் கில் ஜேர்னி எனும் டி.ஜே இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பொக்ஸ் கில் சூப்பர்குரொஸ் தொடரை காண வரும் பார்வையாளர்களை குறிவைத்து பொக்ஸ் கில் ஜேர்னி டி.ஜே இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையக அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரோ அல்லது இலங்கை ஆட்டோமொபைல் விளையாட்டு சங்கத்தினரோ ஆதரவின்றி முழு இராணுவமும் அதிர்ச்சியடைந்திருந்த வேளையில் பொக்ஸ் கில் ஜேர்னி டி.ஜே இரவு ஏற்பாடு செய்யப்பட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.