புதியவன்.
ஜப்பானிய அயலுறவுத்துறை அமைச்சர் யோகோ கமிகாவா உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றிற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் மேலதிக ஆதரவை வழங்குவதே ஜப்பானிய அயலுறவுத்துறை அமைச்சரின் பயணத்தின் நோக்கமாகும்.
இதன்படி, ஜப்பானிய அயலுறவுத்துறை அமைச்சர் அரசதலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.