(புதியவன்)
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இம்மாதம் 10 - 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை நாட்டை வந்தடைந்தார்.
இந்தப் பயணமானது குறித்த நாடுகளுடனான அமெரிக்காவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும் இந்திய - பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்ப அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. இன்று காலை இலங்கையை வந்தடைந்த டொனால்ட் லூ கொழும்பில் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் பலருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளதோடு இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.