வவுனியா பல்கலைக் கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வவுனியா பல்கலைக்கு பிரயோக விஞ்ஞான பீடத்திற்குத் தெரிவான மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த மாணவர்களை வரவேற்கும் முகமாக பல்கலைக்கழக விடுதி மற்றும் அதனுடன் இணைந்த பகுதியில் வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த பதாதையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதுடன் ஆங்கில மொழியும் காணப்படுகின்றது. இருப்பினும் தமிழ் மொழி எழுத்துக்கள் எதுவும் காட்சிப்படுத்தப்படவில்லை.
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களமயமாக்கல் இடம்பெறுவதாக சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் விசனம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.