பழுதடைந்த கேக்கை விற்பனை செய்ததாக வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களிடமே குறித்த முறைப்பாடு நேற்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வைரபுளியங்குளம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட அடைக் கேக் ஒன்றினை கொள்வனவு செய்தவர் குறித்த கேக் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக வவுனியா பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டையடுத்து சுகாதார பரிசோதகர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் பரிசோதனைகளையும், விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.