பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரதீப் என்று கூறலாம். தமிழ் சினிமாவில் அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் பிரதீப் ஆண்டனி.
இந்த 7-வது சீசனில் பிரதீப் ஆண்டனி விளையாடும் விதம் தங்களுக்கு மிகவும் பிடித்து போக மக்கள் அனைவரும் அவர்களுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், நன்றாக விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு சர்ச்சைக்குரிய முறையில் வெளியேற்றப்பட்டார்.
பிரதீப் ஆண்டனி தன்னுடைய சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதம் மற்றும் தொடர்ச்சியாக சில தேவையில்லாத வார்த்தைகளை அவர் பயன்படுத்தி வந்த காரணத்தால் அவர் மீது போட்டியாளர்கள் குற்றம் சாட்டி வந்தார்கள். இதற்கு கமல்ஹாசனும், பிரதீப்புக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல், திடீரென நிகழ்ச்சியிலிருந்து அவரை வெளியேற்றியதற்காக கடும் எதிர்ப்புகளை பெற்றுக்கொண்டார்.
தற்போது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை விட பிரதீப் ஆண்டனிக்கு ஒரு பெரிய வாய்ப்புளிக்க விஜய் டிவி முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்படியாவது ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று பிரதீப் ஆண்டனி பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை அறிந்த விஜய் டிவியில் பங்குதாரரான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், பிரதீப்புக்கு வெப் சீரிஸ் இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், தற்போது பிரதீப் ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.