தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் திகதி சல்மான் கான் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான திரைப்படம் டைகர் 3 (Tiger 3).
பதான் படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் வந்தது போல, டைகர் 3 படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளார். இயக்குனர் மனீஷ் சர்மா இந்த முறை முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் ‘டைகர் 3’ திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுக்க இரண்டு நாளில் ரூ.100 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு இரண்டு நாட்களில் 100 கோடியைத் தாண்டிய மூன்றாவது ஹிந்தித் திரைப்படம் டைகர் 3 ஆகும். இதற்கு முன்னதாக, பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் அந்த சாதனையை படைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி நாளில் வெளியாகி வெறும் இரண்டே நாளில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளதால், நடிகர் சல்மான் கான் நடித்துள்ள லேட்டஸ்ட் படங்களின் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.