லியோ படம் பெரிய வெற்றியடைந்து இருக்கும் நிலையில், நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், சினேகா, லைலா மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி, பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், படத்தை கண்டிப்பாக வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான வேலையில் வெங்கட் பிரபு இறங்கியுள்ளாராம்.
தளபதி 68 படத்தை தமிழ் சினிமாவே பார்க்க காத்துள்ளதை புரிந்துகொண்டு மிகவும் கடினமாக வேலை செய்துகொண்டு வருகிறாராம் . அது மட்டுமில்லாமல் இப்போது ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருக்கும் கருங்காலி மாலையை வாங்கி போட்டு இருக்கிறாராம்.
தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த மாலையை வாங்கி கழுத்தில் போட்டுகொண்டு இருக்கிறார்கள். அதற்க்கு காரணம் தங்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைக்கவும் ராசியாகவும் இருப்பதற்காக தான். அந்த வகையில், வெங்கட் பிரபுவும் கழுத்தில் அந்த கருங்காலி மாலையை வாங்கிப்போட்டு கொண்டு தளபதி 68 படத்திற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறாராம். இ
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.