பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோவில், “நான் ஐஷுவும் பேசுனது தப்பு என்றால் மணியும் ரவீனாவும் பேசுவதும், விஷ்ணுவும் பூர்ணிமாவும் செய்வதும் தவறுதான்” என்று விசித்ராவிடம் மிகவும் கோவமாக நிக்சன் கத்துகிறார்.
இதனையடுத்து, விசித்ரா, ‘மரியாதையாகப் பேசு’ என்று சொல்ல, அதற்கு நிக்சன், “நீ என்னை மதித்தால்தான் உன்னை நான் மதிப்பேன், நீ யாராக இருந்தாலும் சரி, அர்ச்சனா தவறாகப் போவதற்கு நீதான் காரணம்” என்று கூறுகிறார்.
பின்னர் இதில், அர்ச்சனா தலையிட்டு, நான் என்ன கெட்டு போய்ட்டேன் நீங்க பார்த்தீங்க? ஐஷூ வீட்ல 40 நாட்கள் ஒண்ணுமே பண்ணாம நிக்சன் உடன் இருந்த காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், எல்லாரும் ஒரு நாள் வெளியே தான் போக போறோம் அப்போ போய் உண்மையை தெரிந்து கொள்ள ஐஷுவைச் சந்திக்குமாறு நிக்சனுக்கு பதிலடி கொடுத்தார்.
இப்படி, விசித்ராவுக்கு ஆதரவாக அர்ச்சனா நிக்க ஒற்றை ஆளாக சண்டை போடுகிறார் நிக்சன். இந்த ப்ரோமாவை வைத்து பார்த்தால் பிக் பாஸ் வீட்டில் ஒரு கலவரம் நடப்பது போல் தெரிகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.