தளபதி 68 படத்தின் அப்டேட்டை வைத்து நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்திருக்கும் “கான்ஜூரிங் கண்ணப்பன்” படத்தின் முதல் பாடலுக்கான ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சதீஷ், தற்போது முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கி, ஹீரோவாக ‘நாய் சேகர்’ என்ற வெற்றிப் படத்தை வழங்கினார். இப்பொது, சதீஷ் ஹீரோவாக தனது இரண்டாவது படத்தை வழங்க தயாராகி வருகிறார்.
அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் கூட, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். இந்த நிலையில், படக்குழு வித்தியாசமான பாணியில் படத்தின் முதல் பாடல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.
படத்தின் முதல் பாடலுக்கான ப்ரொமோ வீடியோவில், இசையமைப்பாளர் யுவன் மருத்துவராக வருவது போலையும், ஒவ்வொருத்தரும் வந்து எனக்கு அப்படி இப்படினு கூற, அதற்கு யுவன் முன்னதாக பாடியிருக்கும் பாடல்களை கேட்க சொல்லி அறிவுறுத்துவது போல இதுவரை இல்லாத வகையில், படத்தின் முதல் பாடல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் பெரிய டிவிஸ்ட் என்ன என்று கேட்டால், இறுதியில் இந்த படத்தை தயாரிக்கும் அர்ச்சனா கல்பாத்தி கால் செய்வது போலவும் சதீஸிடம் தளபதி 68 அப்டேட் கேட்டதாகவும் கூறி சதீஸ் யுவனிடம், “தளபதி 68 படத்துக்கு பாட்டு ரெடியாக உள்ளதாமே அத என்னனு சொல்லுவிங்களாம் என்று கேட்கிறார்.
அதற்கு யுவன் இல்ல அதுக்கு தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியே காத்திருக்கிறார் அவரிடம் சொல்கிறேன் என்கிறார்” இவ்வாறு சதீஸ் நடித்துள்ள இந்த படத்தை ‘தளபதி 68’ படத்தை எடுத்துக்காட்டாக வைத்து ப்ரோமோஷன் செய்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம், சதீஸ் நடிக்கும் இந்த படத்தை தயாரிக்கும் அர்ச்சனா கல்பாத்தி தளபதி 68 படத்தை தயாரிக்க, யுவன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.