யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்து முழங்காவில் பகுதிக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்து நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. பயணிகள் எந்தக் காயங்களும் இன்றி தெய்வாதீனமாகத் தப்பியுள்ளனர். தனியார் பேருந்தொன்றை அதற்குப் பின்னால் வந்த பேருந்து முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட் டுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.