[ஆதவன்]
வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது பாடசாலைக்கு முன்பாக வீதியில் நின்றவர்களுடன் பாடசாலை மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான தகவல் வழங்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஒன்றுகூடலுக்காக கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த மாணவர்கள் வாகனங்களை அதி வேகமாகச் செலுத்தி வீதியில் வித்தை காட்டியுள்ளனர். அப்போது பிறிதொரு மாணவனை ஏற்ற வந்தபெற்றோர் ஒருவர் விபத்துக்குள்ளானார். பெற்றோருக்கும். அங்கு நின்ற மாணவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்புவரை சென்றுள்ளது. இதையடுத்தே பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.