[புதியவன்]
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தளபதி 68’ . இது நடிகர் விஜயின் 68-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘
இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரசன்னா, பிரபுதேவா, லைலா, ஸ்னேகா, வைபவ், பிரேம் ஜி, மோகன், மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
நீண்ட நாட்களாக காத்திருந்த ‘தளபதி 68’ அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், படம் குறித்த சில தகவல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது. இந்நிலையில், நாளை படத்தின் தலைப்பு அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.