[புதியவன்]
இயக்குனர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம் கதாநாயகியாக நடித்துள்ள ‘ஆர்ட்டிகல் 370’ படத்தின் முன்னோட்டம் (பெப்ரவரி 8) நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம் பெப்ரவரி 23 அன்று திரையரங்குகளில் வர உள்ளது.
இந்த நிலையில், படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில், யாமி கெளதம் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்தார். நடிகை யாமி கெளதம் மற்றும் இயக்குனர் ஆதித்யா தார் இருவரும் அம்மா-அப்பாவாக உள்ளனர்.
தமிழில் நடிகர் ஜெய்யுடன் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்ற படத்தில் நடித்த இவர், ‘URI- தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ படத்தினை இயக்கிய ஆதித்யா தாரை 2012-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில், தம்பதியினர் தங்கள் குடும்பத்தில் இன்னொருவர் இனைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆர்ட்டிகல் 370 -ன் முன்னோட்டம் வெளியீட்டின் போது பத்திரிகையாளர்களிடம் பேசிய யாமி, கர்ப்பமாக இருந்தபோது படத்திற்கான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், மே மாதம் குழந்தை பிறக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கர்ப்ப காலத்திலும் படத்தில் என்ஐஏ ஏஜெண்டாக நடிப்பதற்காக அதற்கான பயிற்சியை மேற்கொண்டதாகவும் யாமி கூறினார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.