(புதியவன்)
2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க வேண்டும் என நோர்வே நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரை 2022- இல் வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். சுதந்திர பேச்சை வெளிப்படுத்த இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ரஷ்யா- உக்ரைன் போரில் உக்ரைன் இராணுவத்துக்கு செயற்கைக்கோள் வழி தொடர்பினை அவரது நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தது. இவற்றுக்காக எலான் பெயரை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம் என மரியஸ் நில்சன் தெரிவித்ததாக பொலிட்கோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.