தனுஷின் ராயன் படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ்:
தனுஷின் ராயன் படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ்:

(புதியவன்)
 
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள அவரது 50 ஆவது படமான ராயன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ் இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் படம் எதிர்பார்ப்பை மிஞ்சிய வசூலை ஈட்டி வெற்றி படமாக உருவெடுத்தது .


இந்நிலையில் நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் மீண்டும் தனது இயக்குநர் (டைரக்டர்) பணியை இனிதே தொடக்கி உள்ளார்.

அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷின் 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார் . ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது .

ராயன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு பிரபல நட்சத்திரம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை மிரட்டலான சுவரொட்டி (போஸ்டர்) மூலம் படக்குழு அறிவித்துள்ளது.(ப)

#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking

852 2

2 Comments

* * * <a href="http://rivyo.com/test-fileupload/uploads/go.php">Apple iPhone 15 Free</a> * * * hs=cb13f8b9a4437dba834d267e44c3a84c* 26-Mar-2024

zkzoly

* * * Apple iPhone 15 Free: http://rivyo.com/test-fileupload/uploads/go.php * * * hs=cb13f8b9a4437dba834d267e44c3a84c* 26-Mar-2024

nfua67

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.