புதியவன்
பிரபு தேவா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அவர் நடிக்கும் பல்வேறு படங்கள் தொடர்பான அறிவிப்பு இரசிகர்களை மகிழ்வித்தன. இந்த வரிசையில், பிரபு தேவா நடிக்கும் சூப்பர் ஹீரோ படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
'மின்மேன்' என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் பிரபு தேவா முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரவீன் மற்றும் சதீஷ் இணைந்து இயக்குகின்றனர். காஷ்யப் இசையமைக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
இந்தியாவின் புதிய சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் மின்மேன் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.