புதியவன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'தலைவர் 171' படத்தில் நடிகை ஷோபனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'தளபதி' படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு டீசருக்கான படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
22 ஆம் திகதி டீசர் வெளியாகவுள்ளது. முன்னதாக, ரஜினி கையில் கடிகாரங்கள் பின்னப்பட்ட போஸ்டர் ஒன்று வெளியானது. இது இரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் நடிக்கவுள்ள நடிகர்களின் தேர்வு பெரும்பாலும் முடிந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தில் நடிகை ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பாரா அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரமா என்பது குறித்த தகவல் இல்லை.
படத்தின் கதை தனக்குப் பிடித்திருக்கிறது எனக் கூறி ஷோபனா நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
1991 ஆம் ஆண்டு வெளியான 'தளபதி' படத்தில் ரஜினியும், ஷோபனாவும் இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். அதேபோல இப்படத்தில் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரியவருகிறது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.