(புதியவன்)
தலைவர் 171 முடிந்ததும் விக்ரம் 2, கைதி 2 ஆகிய படங்களை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்களில் விஜய் நடிக்க வேண்டிய கேமியோ கதாப்பாத்திர காட்சிகளை லோகேஷ் ஏற்கனவே படப்பிடிப்பில் இணைத்துவிட்டாராம்.அதாவது லியோ படப்பிடிப்பின் போதே விஜயை வைத்து சில காட்சிகளை எடுத்துள்ள லோகேஷ், அதனை விக்ரம், கைதி படங்களின் இரண்டாம் பாகத்தில் பயன்படுத்த உள்ளாராம்.
இதனால் விஜய் சினிமாவில் இருந்து விலகினாலும் விக்ரம் 2, கைதி 2 படங்களில் அவரது கேமியோ நடிப்பு கலக்கலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த காட்சிகளுக்கு விஜய் குரல்பதிவு(டப்பிங்) பணிகளையும் முடித்துவிட்டதாக ஹோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (ஐ)
c6ne1l
estnje
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.