மகளிர் தின நிகழ்வும் வினாடி வினா போட்டி பரிசளிப்பு நிகழ்வும்
மகளிர் தின நிகழ்வும் வினாடி வினா போட்டி பரிசளிப்பு நிகழ்வும்

எழிலன்

மகளிர் தினத்தை முன்னிட்டு கொமர்ஷல் வைப்பகத்தால் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் இன்று முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.

மகளிர் தினத்தை முன்னிட்டு கொமர்ஷல் வைப்பக முள்ளியவளைக் கிளையால் முல்லைத்தீவு கல்வி வலயத்துடன் இணைந்து வினாடி வினா போட்டியை கடந்த வாரம் நடத்தியிருந்தனர்.

இதனடிப்படையில் வினாடி வினா போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் இன்று சிறப்பாக இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் வினாடி வினா போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயம் மற்றும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள், பணப்பரிசுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு நான்காம், ஐந்தாம் இடங்கள் வந்த மாணவர்களுக்கு வெற்றிப்பதக்கமும், சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் தலைமை விருந்தினராக கொமர்ஷல் வைப்பகத்தின் வடபிராந்திய முகாமையாளர் அருளம்பலம் ஜெயபாலன், சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திப் பிரிவின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்  சுரேஷ்குமார், கணித பாட உதவி கல்விப் பணிப்பாளர் புஷ்பகாந்தன் கொமர்ஷல் வைப்பகத்தின்  வடபிராந்திய முகாமையாளர் எஸ். கெங்காதரன், முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலை அதிபர் அருட் சகோதரி டிலீசியா ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்

குறித்த வினாடி வினா போட்டியில் ஐந்தாம் இடத்தை புதுக்குடியிருப்பு இணைப்பாலை றோமன் கத்தோலிக்க பாடசாலை  மாணவிகளும், நான்காம் இடத்தை விசுவமடு மகா வித்தியாலய மாணவிகளும்,
மூன்றாம் இடத்தை குமுழமுனை மகா வித்தியாலய மாணவிகளும், இரண்டாம் இடத்தை முல்லைத்தீவு  றோமன்  கத்தோலிக்க மகளிர் பாடசாலை மாணவிகளும், முதலாம் இடத்தை வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவிகளும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.(க)

102 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.