(ஆதவன்)
வவுனியா - தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுச் சிறுமி பாலியல் துர்நடத்தை செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, சக மாணவியூடாக தனது ஆசிரியருக்கு விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து பாடசாலைச் சமூகத்தால் வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர்.
சிறுமி வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.