புதியவன்
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சிறிலீலா. அண்மைக் காலமாக ஏராளமான படங்களை பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து வருகிறார்.
மகேஷ் பாபுவுடன் சிறிலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் என்ற படம் 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றியைப் பெற்றது.
இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் 'குர்ச்சி மடத்த பெட்டி' என்ற பாடலுக்கு சிறிலீலா ஆடிய நடனம் இரசிகர்களைக் கவர்ந்தது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன், சிறிலீலா மற்றும் சதீஷ் ஆகியோர் தனியார் கல்லூரியின் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அவர்கள் இருவரையும் நோக்கி இரசிகர்கள் குர்ச்சி மடத்த பெட்டி பாடலுக்கு இணைந்து நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் குறித்த பாடலுக்கு சில நிமிடங்கள் இணைந்து நடனம் ஆடினர். அப்போது சிறிலீலா, சிவகார்த்திகேயனுக்கு நடன ஸ்டெப்களை கற்றுக் கொடுத்தார்.
கல்லூரி மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களுக்காக கல்லூரி முதல்வரிடம் சிவகார்த்திகேயன் அனுமதி கேட்டார். கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.(க)
xae4tg
1bnhbb
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.