ஆதவன்.
முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுபணிமனைக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று சட்டமா அதிபர் பணிமனை தெரிவித்துள்ளது. முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பணிமனைக்கு வழங்கிய வாக்குமூலம் சட்டமா அதிபர் பணிமனையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் வாக்கு மூலத்தைப் பரிசீலித்த பின்னர் சட்டமா அதிபர் பணிமனை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. விரைவில் மைத்திரி நீதிமன்றில் முற்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.