புதியவன்
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் ஆண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து தொலைபேசியில் காணொலி எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாகக் கடமையாற்றும் நபரே இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் தொலைபேசியை ஆராய்ந்த போது ஏராளமான ஆண், பெண்களின் குளியல் காட்சிகள் காணப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து குறித்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.