புதியவன்
"தலைவர் 171" படத்துக்கான புதுத் தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியிலும் இந்தப் படம் லாபகரமாக அமைந்தது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.
இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. எனினும், இந்தப் படம் தொடர்பாக வேறு எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது.
அந்த வகையில், ரஜினிகாந்த் 171 படம் தொடர்பான புதுத் தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
"தலைவர் 171" படத்துக்கான ரஜினிகாந்த் தோற்றத்தை வெளிப்படுத்தும் படத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.