(புதியவன்)
இரண்டு பெண்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போன சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் இராஜமலை பகுதியில் நேற்று காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்கள் குழுவினால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த இளைஞனை சிகிச்சைக்காக மஸ்கெலியா மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இராணுவத்தினரும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து இளைஞரைத் தேடுவதற்காக 3 நாட்களாக சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் அதனை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.