கல்முனையில் இடம்பெற்ற பாராட்டு விழா!
கல்முனையில் இடம்பெற்ற பாராட்டு விழா!

கல்முனைப் பிராந்தியத்தில் அதிதீவிர போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை கண்காணித்து அவர்களின் சுகாதார மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பாராட்டிப் பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

செரி சர்வதேச தொண்டு நிறுவனம் கல்முனைப் பிராந்தியத்தில் அதிதீவிர போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவும் பொருட்டு கடந்த 6மாதங்களாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார ம்ருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள் ஆகியோர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

குறித்த உத்தியோகத்தர்களை பாராட்டி மதிப்பளிக்கும்  வகையில் பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு ஏற்பாடு செய்த சேவை நலன் பாராட்டு விழா கடந்த புதன்கிழமை (24) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் எம்.சி.எம்.மாஹிர், பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் எம்.ஏ.சி.எம்.பசால், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, நாவிதன்வெளி, நிந்தவூர் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரிகள்,  செரி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேற்குறித்த சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள் இதன் போது பாராட்டி பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

பெண்களுக்கான நலன் கிளினிக்கில் மிகத் திறமையாக செயல்பட்டு முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட நாவிதன்வெளி சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துக்கும் இந்நிகழ்வின்போது விருது வழங்கி ம்திப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனைப் பிராந்தியத்தில் அதிதீவிர போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் சுகாதார நலன் கருதி பல்வேறு கிளினிக், போஷாக்கு உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் உதவித் தொகைகளையும் வழங்கி செரி சர்வதேச தொண்டு நிறுவனம் பெரும் பணியாற்றியுள்ளது.

மேலும், 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 325 ஆகக்காணப்பட்ட அதிதீவிர போசாக்கு குறைபாடு உள்ள பிள்ளைகளின் எண்ணிக்கையானது தற்போது 129 ஆக குறைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)

73 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.