ஆதவன்.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக அமைச்சரவைக்குள் தம்மிக்க பெரேராவை உள்வாங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை அரசதலைவர் ஏற்றுள்ளதாகவும், அமைச்சரவையை மறுசீரமைத்தால் நீதியமைச்சுப் பதவி சுசில் பிரேமஜயந்தவுக்கும், கல்வி அமைச்சு தம்மிக்க பெரேராவுக்கும் வழங்கப்படக்கூடும் எனவும் அரச வட்டாரத்தில் அறியமுடிகின்றது. விடயம் தொடர்பில் அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க இதுவரை எந்தவிதக் கருத்துகளையும் முன் வைக்கவில்லை. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.