அமெரிக்கா எச்சரிக்கை!
ஆதவன்.
எதிரான போரில் ரஷ்யாவுக்கு வழங்கும் உஆதரவுக்காக சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பால் ஐரோப்பாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பனிப்போருக்குப் பின்னர் இத்தகைய ஆபத்தான நிலை தோற்றம் பெற்றுள்ளது என்று அன்ரனி பிளிங்கன் மேலும் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான மோதலில் மட்டுமல்ல, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலிலும் ஈரானுக்கு சீனா உதவிகளை வழங்கி வருகின்றது. தென்சீனக் கடற்பகுதியிலும், தாய்வான் விவகாரத்திலும் சீனாவுக்கு எதிராக தீவிரமான முடிவுகளை அமெரிக்கா எடுத்துள்ளது. ஆதலால், அமெரிக்காமற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில வருடங்களாகவே மிகவும் பின்னடைவுக்குள் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.