(புதியவன்)
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு 9 ஆயிரம் டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிரம்ப், தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக நீதிமன்றில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி டிரம்ப்நீதிமன்றில் ஆஜா்படுத்தப்பட்டபோது அவருக்கு 9 ஆயிரம் டொலர் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.