(புதியவன்)
எதிர்வரும் அமெரிக்க அரசதலைவர் தேர்தலில் முன்னாள் அரசதலைவர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என பிரித்தானிய முன்னாள் தலைமை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் டிரம்ப் இருக்கிறார் என்பதே “உலகம் பாதுகாப்பானது” என்று அர்த்தம் என அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் மிகக் குறுகிய காலம் தலைமை அமைச்சராக பதவி வகித்த ட்ரஸ், மோதல்களால் உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், முன்பை விட இப்போது “வலுவான அமெரிக்கா” தேவைப்படுவதாகவும் கூறுகிறார்.
எதிர்வரும் நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அரசதலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டிரம்ப் முன்னிலையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.