வெளிநாட்டுச் சொக்கிலேட் எண்டால் ஆருக்குத்தான் விருப்பமிருக்காது? ஆனால் அதைச் சாப்பிடுறதெண்டால் வெளிநாட்டுக்காரர் வரும் மட்டும் தவம் கிடக்கவேணும். அதுவும் இப்ப வாற வெளிநாட்டுக்காரர் கடையளில் போய் எந்த பிஸ்கட் பெட்டி மலிவாக் கிடைக்குதோ அதை வாங்கிக் கொண்டந்திட்டு கையை விசுக்கிக் கொண்டு போடுவினம். வெளிநாட்டுச் சொக்கிலேட் கிடைக்குமெண்டு நாக்கில நீர் ஊறக் காத்திருக்கிறவை கடைசியாக் கிடைக்கிறது உந்த மாரி பிஸ்கட்தான்.
இப்பிடிச் சனம் வெளிநாட்டுச் சொக்கிலேட்டுக்கு அந்தரப்படுகிறதைப் பார்த்த பிஸ்னஸ்காரர் சும்மா இருப்பினமோ? இப்பதானே சொடுக்குப் போடுற நேரத்தில வெளிநாட்டில இருந்து என்னத்தையும் கொண்டந்திடலாம். அதால வெளிநாடுகளில் பேமஸான சொக்கிலெட்டுகளையெல்லாம் இஞ்சையுள்ள சுப்பர்மார்க்கெட்டுகளில இறக்கி, அடுக்கி வைக்கத் தொடங்கிச்சினம். அதிலையும் ஒரு றிக்ஸ் இருக்குது. உந்த வெளிநாட்டுச் சொக்கிலேட்டுகளை உள்ளுக்க அடுக்க மாட்டினம். காசு கட்டிற கவுண்டருக்குப் பக்கத்திலதான் கண்ணைக் குத்துற மாதிரி அடுக்கி வைச்சிருப்பினம். பிள்ளையளோட அந்தக் கடையளுக்குச் சாமான் வாங்கப் போறவை காசு கட்ட கவுண்டருக்குப் போகேக்க, பிள்ளையளின்ர கண்ணில அந்தச் சொக்கிலேட்டுக்கள் படாமல் இருக்காது. பிறகென்ன, எப்பிடியும் அதுகளின்ர ஆய்க் சினையால கடைக்காரர் என்ன விலை சொல்லுகினமோ, அதைக் கட்டிப்போட்டு சொக்கிலேட்டுகளை அடுக்கிக் கொண்டு வரவேண்டியதுதான்.
ஆசை மெல்ல மெல்ல பேராசையாகேக்க தான் பிரச்சினை தொடங்கும். வெளிநாட்டுச் சொக்கிலேட் டுகளை இறக்கி, நாலைஞ்சு மடங்கு லாபத்தோட வித்தவைக்கு கை சும்மா இருக்காது. இதைவிட லாபம் பாக்கவேணும் எண்டு துடிக்கும். அதுக்கு என்ன வழி? கொஞ்சக்காசில சொக்கிலேட்டை வாங்கினால் லாபம் கூடும். ஆனால் வெளிநாட்டில் சொக்கிலேட்டை வாங்கி, அதுக்கு கொண்டுவாற கூலி குடுத்து, வரி கட்டி கொண்டந்தால் எப்பிடி கொள்வனவுக்காசைக் குறைக்கமுடியும்? ஆனால் இப்பிடி பேராசை பிடிச்சு அலையிறவைக்கு உதவி செய்யவெண்டே கொழும்பில ஒரு கூட்டம் இருக்கு. எல்லாத்துக்குடுப்ளிகேட்' சாமான் செய்யிற சின்னச் சீனா கொழும்பில இயங்குது. அந்தச் சின்னச் சீனாவில வெளிநாட்டுச் சொக்கிலேட் மாதிரி லேபிள் ஒட்டி, இஞ்சத்தை சொக்கிலேட்டுகளை உள்ளுக்க வைச்சு குடுப்பினம். அப்பிடிக் குடுக்கேக்க அந்தச் சின்னச் சீனாக்காரர் இன்னும் லாபம் பாக்கிறதுக் காக, டேட்போன (காலாவதியான) சொக்கிலேட்டுகளை கொஞ்சக் காசுக்கு வாங்கி, அதின்ர லேபிள் கவரை எல்லாம் உரிச்சுப்போட்டு, இந்த வெளிநாட் டுச் சொக்கிலேட் கவரை ஒட்டிக் குடுப்பினம். அது தெரியாமல் மலிவாக் கிடைக்குது எண்டு சில கடைக்காரர் வாங்கியந்து விக்கிறவை. அப்பிடி வெளிநாட்டுச் சொக்கிலேட் எண்டு நினைச்சு, இஞ்சத்தை சொக்கி லேட்டை வித்த சிலர் பிடிபட்டு இருக்கினம். அதைவிடப் பகிடி என்னெண்டால், எங்கட உள்ளூர் சொக்கி லேட்டை நூறு ரூபா குடுத்து வாங்க மனமில்லாதவை. அதே சொக்லேட் டேட் முடிஞ்ச பிறகு, வேற லேபிள் ஒட்டி வரேக்க ஆயிரம் ரூபா குடுத்து வாங்கிச் சாப்பிட்டிருக்கினம். வெளிநாட்டுச் சொக்கிலேட்டை இஞ்ச வாங்கிறவை கொஞ்சம் அலேர்ட்டா இருங்கோ .
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.