நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் , இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் டொலரின் பெறுமதியில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. அதன்படி, மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபாய் .307ல் இருந்து ரூபாய் 305.58 ஆகவும், விற்பனைப் பெறுமதி ரூ. 322 ல் இருந்து ரூ .320.61 ஆகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூபாய் 306 ல் இருந்து ரூபாய் 307.58 ஆக அதிகரித்துள்ள அதே வேளை விற்பனைப் பெறுமதி ரூபாய் 322 ஆக மாற்றமடையாமல் காணப்படுகிறது. இதேபோல், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபாய் 310 ஆக மாற்றமடையாமல் காணப்படுகின்ற அதே வேளை விற்பனைப் பெறுமதி ரூபாய் 320 ல் இருந்து ரூபாய் 322 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.