உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு ஒன்று சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பிடிப்பட்டுள்ளது.
பிடிக்கப்பட்ட 7 முதல் 8 அடிகள் கொண்ட இந்த மலைப்பாம்பு குட்டி கிண்டி தேசிய பூங்கா அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வரிக்கோடுகள் கொண்ட இந்த மலைப்பாம்பு உலகின் மிக நீளமான இனத்தை சேர்ந்தது எனவும் அதிக எடை கொண்ட பாம்பு இனங்களில் மூன்றாவது எனவும் கூறப்படுகின்றது.
மேலும் நிகோபார் தீவுகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ள இந்த மலைப்பாம்பு சென்னையில் பிடிக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.