1901லிருந்து மருத்துவம், பௌதிகம், வேதியியல், இலக்கியம்,உலக அமைதி ஆகிய 5 துறைகளில் உலக புகழ் பெற்ற விருதான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளின் அறிவிப்பு இந்த மாதம் 2 ஆம் திகதி முதல் தொடங்கியது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம்,அமைதிக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாடியா கோல்டினுக்கு பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.