நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள தேர்தலில் தேசியக் கட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ஒரு இலங்கைத் தமிழர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்தில் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் முன்னாள் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆயினும் சிறு கட்சிகள் துணை கொண்டு தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகம் என கருத்துக் கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளாநந்தம் இடம்பெற்றுள்ளார்.
அவர் இங்கிலாந்து, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தில் பெரும் கட்டுமானத் திட்டங்களில் அலோசகராக பணியாற்றி உள்ளார். குறித்த வேட்பாளர் யாழ்.புனித ஜோன் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.