இந்தியா-இலங்கை இடையேயான செரியாபாணி கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று முன்தினம் இந்தியாவில் இருந்து 50 பேரும், காங்கேசன்துறையிலிருந்து 30 பேரும் கப்பலில் பயணம் செய்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் போதிய அளவு டிக்கெட் முன்பதிவு இல்லாத காரணத்தினால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட்து.
மேலும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தற்பொழுது கப்பல் இயக்கப்பட உள்ளதாகவும் KPV Shaik Mohammed Rowther என்ற தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.